மெரினாவில் காணும் பொங்கலை மிஞ்சிய மக்கள் கூட்டம்

குழந்தைகளை தவற விட்டு தவித்த பரிதாபம்.மெரினா கடற்கரையில் இன்று கட்டுக்கடங்காத கூட்டம்.
மெரினாவில் காணும் பொங்கலை மிஞ்சிய மக்கள் கூட்டம்
Published on

மெரினா கடற்கரையில் காணும் பொங்கல் தினத்தில்தான் மக்கள் அதிக அளவில் வருவார்கள். அப்போது மாலை நேரத்தில் வெயில் ஓய்ந்த பிறகே மக்கள் கூட்டம் காணப்படும்.

ஆனால் இன்று கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காணும் பொங்கலை மிஞ்சும் அளவுக்கு பொதுமக்கள் வயது வித்தியாசம் இன்றி கடறகரை முழுவதும் திரண்டிருந்ததை காண முடிந்தது.

இதனால் கடற்கரை மணற்பரப்பே தெரியாத அளவுக்கு மெரினா கடற்கரை மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. குழந்தைகளை தவற விட்டு தவித்த பரிதாபம்

மெரினா கடற்கரையில் இன்று கட்டுக்கடங்காத கூட்டம் அலை மோதியது. சாகச நிகழ்ச்சியை கண்டு ரசிப்பதற்காக குடும்பத்தோடு பலரும் வந்திருந்தனர். இவர்களில் பலர் தங்களது குழந்தைகளை தொலைத்து விட்டு கண்ணீருடன் தேடி அலைந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com