சென்னை ஐ.ஐ.டியில் கொரோனா பாதிப்பு 55-ஆக உயர்வு

ஐ.ஐ.டி. வளாகம் தொற்று பகுதியாக மாறி இருப்பதால் அங்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி
Published on

சென்னை:

தமிழகத்தில் கடந்த 2 மாதமாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வந்தது. கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டன. ஆனால் முகக்கவசம், சமூக இடைவெளியை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என மருத்துவ துறை வலியுறுத்தியது.

இந்த நிலையில் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் படிக்கும் மாணவிகள் சில பேருக்கு காய்ச்சல், சளி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டன. பரிசோதனை முடிவில் 3 மாணவிகளுக்கு தொற்று உறுதியானது. தொடர்ந்து சுகாதார துறையினர் கண்காணிப்பு மற்றும் தீவிர நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர்.

பாதிக்கப்பட்டுள்ள மாணவிகளுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் ஆய்வு மேற்கொண்டதில் நேற்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் மாணவர்கள், ஊழியர்கள் என 30 பேர் பாதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து நேற்று 1,420 பேருக்கு பரிசோதனை செய்ததில் மேலும் 25 பேருக்கு தொற்று உறுதியானது. இதன்மூலம் ஐஐடி வளாகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடைய எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.

ஐ.ஐ.டி. வளாகம் தொற்று பகுதியாக மாறி இருப்பதால் அங்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com