நீலகிரி அ.தி.மு.க நிர்வாகிகள் எஸ்.பி.வேலுமணியிடம் வாழ்த்து

மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் திரண்டு வந்தனர் பொன்னாடை அணிவித்து ஆசிபெற்றனர்
நீலகிரி அ.தி.மு.க நிர்வாகிகள் எஸ்.பி.வேலுமணியிடம் வாழ்த்து
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்ட அ.தி.மு.க.வில் புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் அவர்கள் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் கோவைக்கு புறப்பட்டு வந்தனர்.

அங்கு அவர்கள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து, பூங்கொத்துகள் வழங்கி வாழ்த்து பெற்றனர்.

இதில் முன்னாள் எம்.பி கே.ஆர்.அர்ஜுணன், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் பாலநந்தகுமார், பாசறை மாவட்டசெயலாளர் அக்கீம்பாபு, மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் தேனாடு லட்சுமணன், பொதுக்குழு உறுப்பினர் மாதன், குந்தா கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர்.எஸ்.வசந்தராஜன், இளைஞரணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com