தாரமங்கலம் அருகே விபசாரம் நடத்திய புரோக்கர் கைது

தாரமங்கலம் அருகே வெளியூர்களில் இருந்து பெண்களை அழைத்துவந்து தனது வீட்டில் வைத்து விபசாரம் நடத்துவதாக தாரமங்கலம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.சேலம் புது ரோட்டை சேர்ந்த அந்த பெண்ணை ேபாலீசார் மீட்டனர். மேலும் சிவலிங்கத்தை கைது செய்தனர்.
தாரமங்கலம் அருகே விபசாரம் நடத்திய  புரோக்கர் கைது
Published on

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகில் உள்ள கே.ஆர்.தோப்பூர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 50). புரோக்கர். இவர் வெளியூர்களில் இருந்து பெண்களை அழைத்துவந்து தனது வீட்டில் வைத்து விபசாரம் நடத்துவதாக தாரமங்கலம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார், ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது கே.ஆர். தோப்பூர் பஸ் நிறுத்தம் அருகே நின்றுகொண்டு இருந்த வாலிபர்களை உல்லாசத்திற்கு தன்னிடம் பெண்கள் இருப்பதாக கூறி சிவலிங்கம் அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்து இருந்த போலீசார் பின் தொடர்ந்து சென்று பார்த்தபோது சிவலிங்கம் வீட்டில் ஒரு பெண் இருப்பதும் அவர் பாலியல் தொழிலுக்கு வந்ததும் தெரியவந்தது. சேலம் புது ரோட்டை சேர்ந்த அந்த பெண்ணை ேபாலீசார் மீட்டனர். மேலும் சிவலிங்கத்தை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com