பள்ளி மாணவியிடம் சில்மிஷம்; தொழிலாளி போக்சோவில் கைது

ஆத்தூர் அருகே உள்ள தென்குமரை கிரா மத்தை சேர்ந்தவர் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 8-ம் வகுப்பு மாணவியை பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது வழிமறித்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த சில்மிஷம் குறித்து மாணவி அவரது பெற்றோரிடம் கூறினார். இது குறித்து மாணவியின் தாயார் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
பள்ளி மாணவியிடம் சில்மிஷம்; தொழிலாளி போக்சோவில் கைது
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தென்குமரை கிரா மத்தை சேர்ந்தவர் கோவர்த்தனன் (வயது 33), கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 8-ம் வகுப்பு மாணவியை பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது வழிமறித்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த சில்மிஷம் குறித்து மாணவி அவரது பெற்றோரிடம் கூறினார். இது குறித்து மாணவியின் தாயார் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், கோவர்த்தனன் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com