மனைவி துர்காவுடன் விமான சாகசத்தை ரசித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வெயில் அதிகமாக இருந்ததால் கூலிங்கிளாஸ் அணிந்து இருந்தனர். பிரமுகர்களுக்கு நிழல் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.
மனைவி துர்காவுடன் விமான சாகசத்தை ரசித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை:

விமான சாகச நிகழ்ச்சியை பார்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காவுடன் மெரினா கடற்கரை பகுதிக்கு வந்தார்.

அங்கு அமைக்கப்பட்டு இருந்த நிழல் பந்தலில் மு.க.ஸ்டாலின், மனைவியுடன் விமான சாகசங்களை பார்த்தார். வெயில் அதிகமாக இருந்ததால் மு.க.ஸ்டாலினும், துர்கா ஸ்டாலினும் கூலிங்கிளாஸ் அணிந்து இருந்தனர். அவர்கள் கைதட்டி ரசித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமை ஏர்மார் ஷல் ஏ.பி.சிங் மற்றும் விமானப்படை அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் விமான சாகசத்தை கண்டு களித்தனர்.

விமான சாகசத்தை பார்ப்பதற்காக மெரினாவில் பொதுமக்கள் திரண்டு இருந்தனர். இதனால் முக்கிய பிரமுகர்களுக்கு நிழல் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த பகுதியில் இருந்து சாகச நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com