இன்று சதுர்த்தி விழா; தஞ்சை பகுதி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.தஞ்சை மாநகரில் 84 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகர்.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகர்.
Published on

தஞ்சாவூர்:

முழுமுதற்கடவுளாம் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி தஞ்சையில் இன்று அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடை பெற்றது.

அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு திரண்டனர்.

தஞ்சை சீனிவாசன் பிள்ளை சாலையில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர், பெரிய கோவிலில் உள்ள விநாயகர் சன்னதி உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பெரிய கோவில் உள்ள விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டன.

இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இது தவிர தஞ்சை மாநகரில் 84 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு அந்தந்த பகுதி பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.

மேலும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வாங்கி வந்து பூஜைகள் செய்து படையல் இட்டு வழிபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com