ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க கோரி புதுச்சேரியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. தர்ணா

நாடு முழுவதும் பா.ஜ.க. வினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் பதாகை ஏந்தி தர்ணா.
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க கோரி புதுச்சேரியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. தர்ணா
Published on

புதுச்சேரி:

டெல்லியில் நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி இந்துக்களை வன்முறையாளர்கள் என பேசியதாக நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல் ராகுல்காந்திக்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரியில் பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ. அசோக்பாபு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் புதுச்சேரி சட்டசபை வளாகத்தின் முன்பு தரையில் அமர்ந்து பதாகை ஏந்தி தர்ணாவில் ஈடுபட்டார்.

ராகுல்காந்தி இந்து சமுதாய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com