கடையத்தில் பாரதியார்-செல்லம்மாள் சிலை பீடத்தில் அமர்த்தப்பட்டது

நூலக கட்டிடத்தில் பாரதியார்- செல்லம்மாள் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. சேவாலயா நிறுவனர் முரளிதரன் தலைமை தாங்கினார்.
கடையத்தில் பாரதி-செல்லம்மாள் சிலை பீடத்தில் அமர்த்தப்பட்ட காட்சி.
கடையத்தில் பாரதி-செல்லம்மாள் சிலை பீடத்தில் அமர்த்தப்பட்ட காட்சி.
Published on

கடையம்:

கடையத்தில் வருகிற 27-ந் தேதி ( திங்கட்கிழமை ) பாரதியார்-செல்லம்மாள் திருமண நாளையொட்டி கடையம் நடுத்தெருவில் அமைந்துள்ள நூலக கட்டிடத்தில் பாரதியார்- செல்லம்மாள் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது.

நூலகம் சேவாலயாவின் செல்லம்மாள் பாரதி கற்றல் மையம் ஆகியவற்றின் திறப்புவிழாவும் நடைபெற உள்ளது . அதற்கான முன்னேற் பாடு நிகழ்ச்சியாக நூலகத்தில் உள்ள மேடையில் இன்று செல்லம்மாள்- பாரதியாரின் சிலை அமர்த்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு சேவாலயா நிறுவனர் முரளிதரன் தலைமை தாங்கினார்.

தெற்கு கடையம் பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சுமி ராமதுரை, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கல்யாணி சிவகாமி நாதன், ஓய்வு பெற்ற ஆசிரியர் நீலகண்டன் தெற்கு கடையம் கவுன்சிலர் மாரி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் கோபால், நூலகர் மீனாட்சிசுந்தரம், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சண்முகம், முன்னாள் கவுன்சிலர் புவனேஸ்வரி, கடையம் பாலன், அமர் சேவா சங்க ஆசிரியர் சண்முகம் வேல்முருகன் மற்றும் சேவாலயா கிங்ஸ்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.சேவாலயா ஒருங்கிணைப்பாளர் சங்கிலிபூதத்தார் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com