தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்பிலான பீடி இலை பண்டல்கள் பறிமுதல்

பீடி இலை பண்டல்களை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க கடலோர காவல்படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பீடி இலை பண்டல்களை கடத்தி வந்தவர்கள் யார்? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்பிலான பீடி இலை பண்டல்கள் பறிமுதல்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி புதிய துறைமுகம் அருகே கோவலம் கடற்கரை பகுதியில் முட்புதருக்குள் பீடி இலைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கடலோர காவல்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் ரென்னீஸ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது முட்புதருக்குள் ஏராளமான மூட்டைகள் பதுக்கி வைக்கபட்டிருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து சோதனை நடத்தினர். இதில் மொத்தம் 2 டன் எடை உள்ள பீடி இலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மதுரையில் இருந்து இந்த பீடி இலை பண்டல்கள் கொண்டு வரப்பட்டு இலங்கைக்கு கடத்தி செல்வதற்கு பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இவற்றின் மொத்த மதிப்பு ரூ.60 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலை பண்டல்களை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க கடலோர காவல்படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் இந்த பீடி இலை பண்டல்களை கடத்தி வந்தவர்கள் யார்? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com