

நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளி யிட்டுள்ள செய்திருக் குறிப் பில் கூறியுள்ளதாவது:-
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின பிரிவை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவி தொகை வழங்கி வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு மாண வர்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவி களுக்கான கல்வி உதவித்தொகை இணை யதளம் புதுப்பித்தலுக்கு கடந்த 10- ந் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 6-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அதே போல் புதிய இனங்களுக்கு இணையதளம் அடுத்த மாதம் 15-ந் தேதி முதல் செயல்படத் தொடங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் ஜனவரி 20-ந் தேதிக்குள் இணைய தளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
http://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm# scholarshipschemes-என்ற அரசு இணையதளத்தில் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளது.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலு வலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணு கலாம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.