பெண் மீது தாக்குதல்- கணவன்,மனைவிக்கு வலைவீச்சு

களக்காடு அருகே உள்ள கீழ உப்பூரணி, தெற்குதெருவை சேர்ந்தவர் நடராஜன் மனைவி செல்வகனி (வயது 53).காயமடைந்த செல்வகனி நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பெண் மீது தாக்குதல்- கணவன்,மனைவிக்கு வலைவீச்சு
Published on

களக்காடு:

களக்காடு அருகே உள்ள கீழ உப்பூரணி, தெற்குதெருவை சேர்ந்தவர் நடராஜன் மனைவி செல்வகனி (வயது 53). இவரது கணவர் நடராஜன் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இதனால் செல்வகனி கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த திரவியக்கனி மனைவி நீலாவதிக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக தகராறு இருந்து வருகிறது.

சம்பவத்தன்று நீலாவதி பிரச்சினைக்குரிய இடத்தில் அதிகாரிகள் அளவீடு செய்து நடப்பட்டிருந்த கல்லை அகற்றியதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த செல்வகனி தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஆத்திரம் அடைந்த நீலாவதியும், அவரது கணவர் திரவியக்கனியும் சேர்ந்து செல்வகனியை செங்கலால் தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர்.

இதில் காயமடைந்த செல்வகனி நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நீலாவதியையும், அவரது கணவர் திரவியக்கனியையும் தேடி வருகின்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com