ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் திருட முயற்சி- வாலிபர் கைது

உடனே கட்டுப்பாட்டு அறையிலிருந்து வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. ராயபுரம் முனியப்பன் தேர்வை சார்ந்த வெங்கட்ராமன் என்பவர் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் திருட முயற்சி- வாலிபர் கைது
Published on

சென்னை:

சென்னை வியாசர்பாடி எஸ்.எம். நகர் பகுதியில் இருந்த ஏ.டி.எம். மையத்தில் முன்புற கவர் உடைக்கப்படுவதை கண்காணிப்பு கேமரா மூலம் அறிந்த மும்பையில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். கட்டுப்பாட்டு அறை அதிகாரி, தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறிக்கை போன் செய்து தகவல் தெரிவித்தார் உடனே கட்டுப்பாட்டு அறையிலிருந்து வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

இரவு நேர ரோந்து பணியில் இருந்த வியாசர்பாடி போலீசார் சிவராஜ், செட்டார், கதிரவன், ஞான பிரசாத் ஆகிய நால்வருக்கும் காவல் நிலையத்தில் இருந்து தகவல் தெரிவித்ததை அடுத்து ஏ.டி.எம். மிஷினை உடைத்துக் கொண்டிருக்கும் பொழுதே மர்ம நபர் கையும் களவுமாக பிடிபட்டார். பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்திய போது ராயபுரம் முனியப்பன் தேர்வை சார்ந்த வெங்கட்ராமன் என்பவர் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com