ஆலங்குளத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு பாராட்டு

ஆலங்குளம் அரசு நூலகத்தில் பயின்று டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றிபெற்றவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
ஆலங்குளத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு பாராட்டு
Published on

ஆலங்குளம்:

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆலங்குளம் அரசு நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற, ஆலங்குளம் அரசு நூலகத்தில் பயின்று டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றிபெற்று பல்வேறு துறை அரசு பணிகளில் சேர உள்ளவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் கலந்து கொண்டு, தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதாமோகன்லால், அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் ஷீலா, வட்டார நூலகர் பழனீஸ்வரன், நூலக வாசகர்கள் வட்ட தலைவர் தங்கசெல்வம், மனவளக்கலை மன்ற பேராசிரியர் . சிவஞானம், செங்கோட்டை நூலக வாசகர்கள் வட்ட நூலகர் ராமசாமி, டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் ஆலங்குளம் அரசு கலை கல்லூரி மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com