சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற முதியவர் கைது

சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.போலீசார் ஆரூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தனர்.
சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற முதியவர் கைது
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் ஆரூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன் (வயது 75) என்பவர் வீட்டின் அருகே பிளாஸ்டிக் குடத்தில் வைத்து சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை கைது செய்த போலீசார், சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com