கனமழை-சூறைக்காற்றால் விமான சேவை பாதிப்பு: 3 விமானங்கள் சென்னையில் தரை இறங்க முடியாமல் பெங்களூரு சென்றன

லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூர் திரும்பிச் சென்றது.இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் சென்னையில் தரை இறங்க முடியாமல், பெங்களூர் திரும்பிச் சென்றது.
கனமழை-சூறைக்காற்றால் விமான சேவை பாதிப்பு: 3 விமானங்கள் சென்னையில் தரை இறங்க முடியாமல் பெங்களூரு சென்றன
Published on

ஆலந்தூர்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் இருந்து இன்று அதிகாலை வரை இடி மின்னல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக, சென்னை விமான நிலையத்தில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

டெல்லியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 154 பயணிகளுடன் நேற்று நள்ளிரவு 11:35 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தரை இறங்க வந்தது. அந்த நேரத்தில் பலத்த காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்தது கொண்டிருந்ததால், விமானம் தரை இறங்க முடியாமல், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

அதை போல் ஜெர்மன் நாட்டின் பிராங்க்பார்ட் நகரில் இருந்து 268 பயணிகளுடன், நள்ளிரவு 12:05 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரை இறங்க வந்த லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூர் திரும்பிச் சென்றது.

அதைப்போல் இன்று அதிகாலை 1:15 மணிக்கு, கொல்கத்தாவில் இருந்து, 167 பயணிகளுடன் சென்னையில் தரையிறங்க வந்த, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் சென்னையில் தரை இறங்க முடியாமல், பெங்களூர் திரும்பிச் சென்றது.

மேலும் பாரிஸ் நகரில் இருந்து சென்னை வந்த ஏர் பிரான்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஐதராபாத்தில் இருந்து வந்த, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னையில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரமாக வானில் வட்டம் அடித்து விட்டு, தாமதமாக தரையிறங்கின.

அதைப்போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களான பாங்காக், பிராங்க்பார்ட், பாரிஸ் ஆகிய 3 விமானங்கள், தாமதமாக புறப்பட்டு சென்றன.

சென்னையில் நேற்று நள்ளிரவில் இருந்து, இன்று அதிகாலை வரை காற்று, இடி மின்னலுடன் கனமழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் வருகை, புறப்பாடு 8 விமானங்கள், தாமதம் ஆகி, பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com