நாசரேத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

நாசரேத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் கலந்து கொண்டு பூத் கமிட்டிகளுக்கான புத்தகத்தை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.
நாசரேத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
Published on

நாசரேத்:

நாசரேத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராஜேந்திரன் கலந்து கொண்டு பூத் கமிட்டிகளுக்கான புத்தகத்தை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். நகர செயலாளர் கிங்சிலி வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவா் திருபாற்கடல், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளா் ஞானையா, ஒன்றிய மகளிரணி செயலாளா் ஜுலியட் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

இதில் நகர அவைத்தலைவா் சிவசுப்பு, இணை செயலாளா் கோமதி, ஜெயலலிதா பேரவை செயலாளா் தினகரன், துணை செயலாளா் முருகேசன், மகளிரணி கிருபா, மாணவரனி செயலாளா் அா்ஜுன், வாா்டு செயலாளா் செல்வகுமாா், செல்வின் விக்டா், பெல்வின், ராஜ்குமாா், பட்டுதங்கம், சில்வியா, தங்கராஜ், காா்த்திக், பாலா, மாயாண்டி, ஆறுமுகநயினாா் மற்றும் வார்டு செயலாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நாசரேத் நகர அ.தி.மு.க. செயலாளர் கிங்சிலி மற்றும் தொண்டர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com