கோவில்பட்டி புற்றுக்கோவிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜை

சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜை நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் கோமாதாவிற்கு சிறப்பு பூஜை தீபாராதனை நடைப்பெற்றது.
சிறப்பு பூஜையில் கோமாதாவிற்கு தீபாராதனை நடைப்பெற்ற காட்சி. 
சிறப்பு பூஜையில் கோமாதாவிற்கு தீபாராதனை நடைப்பெற்ற காட்சி. 
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜை நடைப்பெற்றது. இதனையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு விநாயகர், முருகன், சங்கரலிங்க சுவாமி, சங்கரேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைப்பெற்றது. தொடர்ந்து சிவன் சன்னதியில் நடராஜர் சிலை அலங்கரிக்கப்பட்டு கோமாதாவிற்கு சிறப்பு பூஜை தீபாராதனை ஒரே நேரத்தில் நடைப்பெற்றது. இதில் சுற்று வட்டார மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை சுப்பிரமணிய ஐயர் செய்தார். முடிவில் பக்தர்களுக்கு களி பிரசாதமாக வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com