புவனகிரி அருகே தீ விபத்தில் சிகிச்சை பெற்று வந்த பெண் பலி

மீனா சமைத்துக்கொண்டு இருக்கும் போது எதிர்பா ராத விதமாக இவரது நைட்டியில் தீ பிடித்தது. மீனா மீது பரவிய தீயை போராடி அணைத்தனர்.
புவனகிரி அருகே தீ விபத்தில் சிகிச்சை பெற்று வந்த பெண் பலி
Published on

கடலூர்: 

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கள்ளிக் காட்டு தெருவை சேர்ந்தவர் மீனா (வயது 31). இவர் கடந்த 22-ந்தேதி வீட்டில் சமைத்துக்கொண்டு இருக்கும் போது எதிர்பா ராத விதமாக இவரது நைட்டியில் தீ பிடித்தது. உடனே வீட்டை விட்டு வெளியில் வர முயன்றார். ஆனால் இவரது உடல் முழுவதும் தீ மளமளவென பரவியது. 

இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் மீனா மீது பரவிய தீயை போராடி அணைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீனாவை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். பின்னர் மேல்சிகிச்சைக் காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ைவக்கப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலினின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com