

கடலூர்:
பண்ருட்டி அருகே வீரப்பெருமாநல்லூரை சேர்ந்தவர் சிவஹரி (வயது31), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சந்திரலேகா (26). இருவரும் நேற்று இரவு உறவினர் வீட்டு விசேஷத்திற்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு திருவாமூர் வழியாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திருவாமூர் ரோட்டில் இருந்த பெட்ரோல் பங்க் ஒன்றில் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் போட்டு கொண்டு வெளியே வந்தனர். அப்போது திருச்சியில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்த கார் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதனால் படுகாயம் அடைந்த சிவஹரியும் சந்திரலேகாவையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். வரும் வழியில் சந்திரலேகா பரிதாபமாக உயிரிழந்தார். சிவஹரி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.