

எட்டயபுரம்:
எட்டையாபுரம் நடுவிற் பட்டியைச் சேர்ந்த சரவணன் மகன் சதீஷ்குமார் (வயது 41) என்பவர் எட்டயபுரம்- விளாத்திகுளம் செல்லும் சாலையில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம்போல் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று இரவு 7 மணியில் இருந்து மழை தொடர்ந்து பெய்து வந்தது. இந்நிலையில் மின் தடை ஏற்பட்டு மீண்டும் வந்தது.
இந்நிலையில் மின் கசிவால் பர்னிச்சர் கடை தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கடை உரிமையாளர் சதீஷ்குமாருக்கும் , தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
மேலும் இது குறித்து எட்டையபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின் கசிவால் விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் தீ வைத்தனரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.