சென்னை தி.நகரில் பிரபல ஜவுளிக்கடை குடோனில் தீ விபத்து - துணிகள் எரிந்து நாசம்

ஜவுளிக்கடையின் குடோனில் தீ விபத்து ஏற்படக் காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். தீயில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள துணிகள் எரிந்து இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.
சென்னை தி.நகரில் பிரபல ஜவுளிக்கடை குடோனில் தீ விபத்து - துணிகள் எரிந்து நாசம்
Published on

சென்னை:

பிரபல ஜவுளி கடைக்கு சொந்தமான குடோன் தி.நகர் பகுதியில் உள்ளது. அந்த பகுதியில் இருந்து இன்று அதிகாலை புகை வந்தது. கடையின் காவலாளி புகை வருவதை பார்த்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

போலீசாரும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தேனாம்பேட்டை நிலையத்தில் இருந்து 2 வாகனங்கள் வந்தன. தீயணைப்பு படை வீரர்கள் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை நோக்கி தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அதிகாலை நேரம் என்பதால் வாகன நெரிசல் எதுவும் இல்லை. தீயணைப்பு வாகனங்கள் விரைவாக வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மேலும் ஜவுளிக்கடையின் குடோனில் தீ விபத்து ஏற்படக் காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

இந்த தீ விபத்தில் குடோனில் கட்டு கட்டாக இருந்த துணிகள் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் பெரிய அளவில் ஏற்படக் கூடிய தேசம் உடனடியாக தீயை அணைக்கப்பட்டதால் தவிர்க்கப்பட்டுள்ளது.

தீயில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள துணிகள் எரிந்து இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. தி.நகர் ஜவுளிக் கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com