நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் செயின் பறிப்பு

எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்ம நபர் கழுத்தில் கிடந்த தங்க செயினை பறித்தார். நீலாவதி தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் செயின் பறிப்பு
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை அருகே உள்ள பிள்ளையார்பட்டி சோழன் நகரை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி நீலாவதி (55).

இவர் தனது பேத்தியை அருகே உள்ள பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு தனியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்ம நபர் திடீரென நீலாவதியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயினை சட்டென்று பறித்தார். அதிர்ச்சி அடைந்த நீலாவதி திருடன்.. திருடன். என கத்தி கூச்சலிட்டார்.

ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்து நீலாவதி தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com