மானூர் அருகே ஆடையில் தீ பிடித்து 101 வயது மூதாட்டி பலி

மானூர் அருகே உள்ள துப்பனாபுரத்தை சேர்ந்தவர் செல்வநாயகம். இவரது மனைவி செல்லத்தாய் (வயது101)இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து போது எதிர்பாராதவிதமாக அங்கு எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியில் இருந்த தீ ஆடையில் பற்றியது.
மானூர் அருகே ஆடையில் தீ பிடித்து 101 வயது மூதாட்டி பலி
Published on

நெல்லை:

மானூர் அருகே உள்ள துப்பனாபுரத்தை சேர்ந்தவர் செல்வநாயகம். இவரது மனைவி செல்லத்தாய் (வயது101).

இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து போது எதிர்பாராதவிதமாக அங்கு எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியில் இருந்த தீ ஆடையில் பற்றியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com