தேனியில் உள்ளாட்சி தேர்தல் பணிக்கு 3544 வாக்குப்பதிவு அலுவலர்கள்

தேனியில் உள்ளாட்சி தேர்தலையொட்டி 3544 வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கு கணினி முறையில் ஒதுக்கீடு செய
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கு கணினி முறையில் ஒதுக்கீடு செய
Published on

தேனி:

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் நாளை  நடைபெற உள்ளது. தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 22 பேரூராட்சிகளுக்கு வாக் குப்பதிவு நடைபெறவுள்ளது.

இதனையொட்டி, தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேசிய தகவல் மையத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான வாக்குச்சாவடிகள் கணினி முறையில் ஒதுக்கீடு செய்வதற்கான 3ம் கட்ட குலுக்கல் முறை பணி  தேனி மாவட்ட தேர்தல் அலுவலரும்  கலெக்டருமான முரளிதரன் மற்றும் மாவட்ட தேர்தல் பார்வையாளர் சங்கர் தலைமையிலும் நடைபெற்றது.

இதில் தேனி மாவட்ட அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 3544 வாக்குப்பதிவு அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தண்டபாணி, துணை இயக்குநர் (பேரூராட்சிகள்) முத்துக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தங்கராஜ், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com