விழுப்புரத்தில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

விழுப்புரத்தில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் ஆசாகுளம் பகுதிகளில் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.
கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

விழுப்புரம்:

விழுப்புரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட2வாலிபர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். விழுப்புரம் ஆசாகுளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் டி.எஸ். பி.பார்த்திபன் மேற்பார்வை யில்தாலுகா இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் ஆசாகுளம் பகுதிகளில் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

ஆசாகுளம் குடிசை பகுதி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்த 2 பேரை போலீஸ் நிலையம்அழைத்து வந்து விசாரணை செய்ததில் அவர்கள் ஆசாகுளம் செந்தில் குமார் மகன் ஞானவேல் (19), விழுப்புரம் சித்தேரிக்கரை பாலு மகன் ஸ்ரீதர் (20) என்பது தெரிய வந்தது. அவர்கள் 350கிராம் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை க்காக வைத்திருந்ததை பறிமுதல் செய்துவழக்கு பதிவு செய்து 2 பேைர கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com