தூத்துக்குடியில் டிரைவரை தாக்கி பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது

குருசாமி நேற்று முன்தினம் இரவு லாரியில் லோடு ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி சென்றார். இரவில் தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் அருகே வந்த போது அவ்வழியாகவந்த வாலிபர்கள் அவரை மறித்து பணம் கேட்டனர்.
பரத்விக்னேஷ்
பரத்விக்னேஷ்
Published on

தூத்துக்குடி:

தென்காசி மாவட்டம் செங்கோட் டையை சேர்ந்தவர் குருசாமி (வயது 50). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு லாரியில் லோடு ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி சென்றார்.

இரவில் தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் அருகே வந்த ேபாத அவ்வழியாகவந்த வாலிபர்கள் அவ ரை மறித்து பணம் கேட்டனர். அவர் மறுக்கவே ஆத்திர மடைந்தவர்கள் அரிவாளால் அவரை வெட்டிவிட்டு அவரிடம் இருந்த ரூ. 35 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு தப்பியோடினர்.

இதில் படுகாயமடைந்த குருசாமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் கொள்ளையில் ஈடுபட்டது தூத்துக்குடி திரு.வி.க.நகரை சேர்ந்த பரத்விக்னேஷ் (22), மகராஜா (22) மற்றும் 2 பேர் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பரத் மற்றும் மகராஜாவை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com