உக்கடத்தில் கஞ்சா பதுக்கி விற்ற 2 பேர் கைது

புல்லுக்காட்டில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.ரூ.3,100 ரொக்க பணம், ஒரு மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
உக்கடத்தில் கஞ்சா பதுக்கி விற்ற 2 பேர் கைது
Published on

கோவை

கோவை தெற்கு உக்கடம் அருகே உள்ள புல்லுக்காட்டில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து பெரியக்கடை வீதி சப்-இன்ஸ்பெக்டர்கோமதி தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த புல்லுக்காடு குடிசை மாற்றுவாரிய குடியிருப்பை சேர்ந்த காய்கறி வியாபாரி நவுபல் ரகுமான் (வயது 20), சி.எம்.சி. காலனியை சேர்ந்த சூர்யா (18) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 1 கிலோ கஞ்சா, ரூ.3,100 ரொக்க பணம், ஒரு மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.   

X

Maalai Malar
www.maalaimalar.com