அமைச்சர் ஜெயக்குமார் புகாருக்கு திண்டுக்கல் லியோனி விளக்கம்

வண்ணாரப்பேட்டையில் தி.மு.க. கூட்டத்துக்கு பிறகே கலவரம் தொடங்கியது என்ற அமைச்சர் ஜெயக்குமாரின் புகாருக்கு திண்டுக்கல் லியோனி விளக்கம் அளித்துள்ளார்.
திண்டுக்கல் லியோனி
திண்டுக்கல் லியோனி
Published on

சென்னை:

வண்ணாரப்பேட்டையில் தி.மு.க. கூட்டத்துக்கு பிறகே கலவரம் தொடங்கியது. அந்த கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் லியோனி கலவரத்தை தூண்டிவிடும் வகையில் பேசியதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

இதற்கு பதிலளித்து லியோனி விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

வண்ணாரப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, “பாபர் மசூதி தீர்ப்பை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதை பற்றி பேசினேன். அவர்கள் மார்க்கத்தை விட மண்ணை அதிகம் நேசிப்பவர்கள் என்று தான் குறிப்பிட்டு பேசினேன். போராட்டத்தை தூண்டி விடும் நோக்கத்தில் எதையும் பேசவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com