திருவாரூர்- திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலிலும் மக்கள் வெற்றியை தருவார்கள்- தினகரன் பேச்சு

ஆர்.கே.நகரை போல் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலிலும் அ.ம.மு.க வை மக்கள் அமோக வெற்றி பெற செய்வார்கள் என்று தினகரன் பேசினார். #dinakaran #thiruparankundramelection
திருவாரூர்- திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலிலும் மக்கள் வெற்றியை தருவார்கள்- தினகரன் பேச்சு
Published on

திருத்துறைப்பூண்டி:

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு பிரச்சார பயணத்தை தொடங்கினார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடியில் நேற்று இரவு மக்கள் மத்தியில் திறந்த வேனில் நின்றப்படி தினகரன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. ஆட்சி தொடர காரணம் சசிகலா தான். ஆனால் ஆட்சி பொறுப்பில் உள்ளவர்கள் எப்படி ஆட்சியில் உள்ளோம் என்பதை உணராமல் ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்து விட்டு துரோக சிந்தனையுடன் பேசி வருகின்றனர்.

முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் தரம் தாழ்ந்து என்னையும் பொதுச்செயலாளர் சசிகலாவையும் பேசி வருகிறார்கள். இந்த துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். டெல்டா மாவட்டங்கள் வேளாண்மை மண்டலமாக அறிவித்து பாதுகாக்க வேண்டும். ஜெயலலிதா மீத்தேன் திட்டத்தை வரவிடாமல் தடுத்தார். ஆனால் அமைச்சர்கள் ஊழலில் கைதாகி விடுவோம் என பயந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றனர்.

ஊழல் பயத்தினால் அமைச்சர்கள் தூங்கும் போது டி.டி.வி. தினகரன் கனவில் வருகிறான். அதனால் தான் தி.மு.க.- காங்கிரஸை எதிர்த்து நடத்திய கூட்டத்தில் கூட தினகரனை பற்றி பேசியுள்ளனர். அதன்மூலம் என் மீது எவ்வளவு பயம் இருக்கிறது என்பது தெரிகிறது.

ஆர்.கே. நகரில் ஆட்சி அதிகாரம் கொண்டு காவல் துறை துணையுடன் ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் பணம் வழங்கி ஜெயித்து விடலாம் என கனவு கண்டனர். ஆனால் நீதி, நேர்மை, நியாயம் என அந்த தொகுதி மக்கள் என்னை ஜெயிக்க வைத்தனர்.

இதே போன்று டிசம்பர் மாதம் நடைபெற திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலிலும் அ.ம.மு.க வை மக்கள் அமோக வெற்றி பெற செய்வார்கள். தொடர்ந்து அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் நிச்சயம் வரும். அதில் அ.ம.மு.க 200-க்கும் மேற்பட்ட தொகுதிகள் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

அமைச்சர் துரைகண்ணு கசாப்பு கடையில் வேலை பார்ப்பவர் போல் கூட்டத்தில் நாக்கை அறுப்பேன் என பேசியுள்ளார். காட்டில் இலைகளை கட்டி கொண்டு திரிய வேண்டியவர்கள் ஜெயலலிதா புண்ணியத்தில் அமைச்சர்களாக உள்ளனர்.

இவ்வாறு தினகரன் பேசினார். #dinakaran #thiruparankundramelection

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com