கூட்டுறவு வங்கி மோசடி குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்- தினகரன் பேட்டி

கூட்டுறவு வங்கி மோசடி குறித்து அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
தினகரன்
தினகரன்
Published on

மதுரை:

அம்மா மக்கள் முன் னேற்றக்கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் இதில் கோர்ட்டு தலையிட வேண்டும்.

பொள்ளாச்சி சம்பவத்தில் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வி‌ஷசயத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தமிழக அரசு உரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாததால், குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் வாழ்வை சீரழித்தவர்கள் எந்த வகையிலும் தப்பி விடக்கூடாது.

நடிகர் ரஜினிகாந்த் நல்ல நடிகர். சூப்பர் ஸ்டார். எனவே அவருக்கு மத்திய அரசு சிறந்த நடிகருக்கான விருதை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நடைபெறும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் யார் தவறு செய்திருந்தாலும் காழ்ப்புணர்ச்சியின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது சசிகலா அ.தி.மு.க.வில் சேரப் போவதாக தகவல் வெளியாகி உள்ளதே? என நிருபர்கள் கேட்டனர். அதற்கு எனக்கும் ஒரு தகவல் கிடைத்துள்ளது என தினகரன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com