பெங்களூரு சிறையில் இன்று சசிகலாவுடன் தினகரன் சந்திப்பு

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் தினகரன் சந்தித்து பேசினார்.
தினகரன்
தினகரன்
Published on

தர்மபுரி:

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை 15 நாட்களுக்கு ஒருமுறை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளரும், ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தினகரன் சந்தித்து பேசுவது வழக்கம்.

அதன்படி இன்று பகல் 12.45 மணிக்கு பெங்களூரு சிறைக்கு வந்த தினகரன் சசிகலாவை சந்தித்து பேசினார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை அரசியல் கட்சியாக தேர்தல் கமி‌ஷனில் பதிவு செய்து அனுமதி பெற்றது குறித்தும், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் சசிகலாவிடம் தினகரன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com