டி.ஜி.பி. ராஜேந்திரன் பணி நீட்டிப்பு விவகாரம்: மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

டி.ஜி.பி. ராஜேந்திரன் பணி நீட்டிப்பு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மதுரை ஐகோர்ட்டு கிளையில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
டி.ஜி.பி. ராஜேந்திரன் பணி நீட்டிப்பு விவகாரம்: மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
Published on

மதுரை:

தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் பணி நீட்டிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதி மன்ற மதுரை கிளையில் கதிரேசன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமி நாதன் அமர்வு இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் தமிழக அரசின் தலைமை செயலாளர் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் குட்கா விவகாரம் தொடர்பாக ஜூலை 9 2016-ல் வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழக அரசுக்கு புகார் கடிதம் அனுப்பியதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் ஆவணங்களை ஆய்வு செய்த போது அதுபோன்ற புகார் கடிதம் ஏதும் தமிழக அரசுக்கோ, அதன் துறைகளுக்கோ வரவில்லை என்பது தெரிய வந்துள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com