இறுதி ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து மோத வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை: விராட் கோலி

சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோத வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இறுதி ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து மோத வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை: விராட் கோலி
Published on

இங்கிலாந்து - இந்தியா கலாசார ஆண்டை குறிக்கும் வகையில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்ச்சியில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர் கும்பிளே மற்றும் இந்திய முன்னாள் வீரர்கள் பரூக் என்ஜினீயர், திலிப் தோஷி, இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் ஆன்ட்ரூ ஸ்டிராஸ், மான்டி பனேசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது இந்திய கேப்டன் கோலி நிருபர்களிடம் கூறியதாவது:-

சாம்பியன்ஸ் கோப்பையில் அரைஇறுதியில் யாருடன் விளையாடுகிறோம் என்பது ஒரு பிரச்சினையே இல்லை. லீக் சுற்று தான் கடினமானவை. இன்னும் ஒரு வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடும் வாய்ப்பு கிட்டியுள்ளது. இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுவதை பார்க்க ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். அரைஇறுதியில் இரு அணிகளும் நன்றாக விளையாடினால், ரசிகர்களின் ஆசைப்படி இறுதிப்போட்டி அமையலாம்.

இந்திய அணி எங்கு விளையாடினாலும் ரசிகர்கள் மைதானத்திற்கு பெரிய அளவில் வந்து ஆதரவு அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கிலாந்தில் வெயில் மட்டும் நன்கு அடித்தால், இதைவிட கிரிக்கெட் விளையாடுவதற்கு உலகில் சிறந்த இடம் எதுவும் இருக்க முடியாது. பொதுவாக இங்கிலாந்து மண்ணில் வெள்ளை நிற பந்து (20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிக்கு பயன்படுத்தப்படுகிறது) அதிகமாக ஸ்விங் ஆவதில்லை.

மேகங்கள் சூழ்ந்தால், அதன் பிறகு சீதோஷ்ண நிலை மாறி கொஞ்சம் கடினமாகி விடும். எந்த ஸ்கோரில் பேட்டிங் செய்து கொண்டு இருந்தாலும் இங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு மதிப்பு அளித்து தான் ஆக வேண்டும். இது தான் இங்கு விளையாடுவதில் அழகான விஷயம். ஒரு பேட்ஸ்மேனாக இங்கு நிலவும் சூழல் சவால் அளிப்பதாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com