சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு: லாலு பிரசாத் மகள்- மருமகனுக்கு ஜாமீன்

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பாரதி, மருமகன் சைலேஷ் குமார் ஆகியோருக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு: லாலு பிரசாத் மகள்- மருமகனுக்கு ஜாமீன்
Published on

புதுடெல்லி:

பீகார் முன்னாள் முதல்- மந்திரியும், ராட்டிரீய ஜனதா தள தலைவருமான லாலுபிரசாத் யாதவின் மகள் மிசா பாரதி, மருமகன் சைலேஷ்குமார் ஆகியோர் மீது அமலாக்கத்துறையினர் சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

இந்த வழக்கில் இருவரும் ஏற்கனவே அமலாக்கத்துறை முன்பு ஆஜராகி இருந்தனர். இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே இருவரும் டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு செய்து இருந்தனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு இன்று உத்தரவிட்டது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com