டெல்லி பா.ஜ.க. தலைவருக்கு கொலை மிரட்டல்

டெல்லி பா.ஜ.க. தலைவர் மனோஜ் திவாரிக்கு குறுஞ்செய்தி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி பா.ஜ.க. தலைவருக்கு கொலை மிரட்டல்
Published on

புதுடெல்லி: 

டெல்லி பா.ஜ.க. தலைவரான மனோஜ் திவாரி, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் டெல்லி வடகிழக்கு தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

அவரது செல்போனுக்கு கடந்த வெள்ளியன்று கொலைமிரட்டல் விடுத்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. ஆனால் மனோஜ் திவாரி, அந்த குறுஞ்செய்தியை நேற்று மாலை தான் பார்த்துள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார். 

இதுகுறித்து மனோஜ் திவாரி கூறியதாவது:- 

எனது செல்போனுக்கு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அந்த குறுச்செய்தியில், பலத்த கட்டாயத்தின் பேரிலேயே, உங்களை கொலை செய்ய போகிறேன். இதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். தேவைப்பட்டால் பிரதமரையும் கொலை செய்வோம்  என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுபற்றி போலீசிடம் தெரிவித்துள்ளேன். விரைவில் முறையான புகாரை அளிக்க இருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.   

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com