ஜப்பான் பாதுகாப்பு துறை மந்திரியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு

தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசியான் மாநாட்டில் பங்கேற்ற இந்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், அங்கு ஜப்பான் பாதுகாப்பு துறை மந்திரியை சந்தித்துப் பேசினார்.
ஜப்பான் மந்திரியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு
ஜப்பான் மந்திரியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு
Published on

பாங்காக்:

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆசியான் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு துறை மந்திரிகள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்க இந்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று தாய்லாந்து புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆசியான் மாநாட்டில் பங்கேற்ற இந்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், அங்கு ஜப்பான் பாதுகாப்பு துறை மந்திரியை சந்தித்துப் பேசினார். இருநாடுகளின் உறவை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com