

‘மினி உலக கோப்பை’ என்று அழைக்கப்படும் 8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில், மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் லண்டன் ஓவலில் நேற்று மல்லுகட்டின. ஆனால் இறுதியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை எளிதில் வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-
‘தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. ஆனாலும் எனது முகத்தில் சிரிப்பு இருக்கிறது. அதற்கு காரணம், நமது வீரர்கள் இந்த தொடரில் ஆடிய விதத்தை நினைத்து பெருமைப்படுகிறேன். இறுதிப்போட்டியில் ஒட்டுமொத்த பெருமையும் பாகிஸ்தானையே சாரும். எல்லா வகையிலும் எங்களை தோற்கடித்து விட்டனர். அவர்களுக்கு வாழ்த்துகள்.