குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மதுரையில் சிகிச்சை பெற்று வந்த அணுவித்யா என்பவர் இன்று மரணமடைந்தார். #TheniFire
குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு
Published on

மதுரை:

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த 11-ம் தேதி மாலை தீப்பிடித்தது. இந்த விபத்தில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிகொண்டனர். பலர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 9 பேர் சடலமாக மறுநாள் மீட்கப்பட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்திருந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவுந்தம்பாடியை சேர்ந்த கண்ணன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனை அடுத்து சிலமணி நேரங்களிலேயே அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னையைச் சேர்ந்த அணுவித்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மரணமடைந்தார். #TheniFire 

X

Maalai Malar
www.maalaimalar.com