வடக்கு சீனாவில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை: 5 பேர் பலி

வடக்கு சீனாவின் மங்கோலியா பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழைக்கு ஐந்து பேர் பலியாகினர்.
வடக்கு சீனாவில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை: 5 பேர் பலி
Published on


பீஜிங்:

சீனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மங்கோலியாவின் ஒரு முக்கிய நகரில் நேற்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. 

பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றுக்கு ஐந்து பேர் பலியாகினர் என சீன ஊடகம் கூறியுள்ளது. மேலும் மூன்று கிராமங்களை தாக்கிய இந்த சூறாவளியால் சுமார் 30 வீடுகள் சேதமடைந்தன. இதன் காரணமாக 270 பேர் பாதிக்கப்பட்டனர்.

காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com