பாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட்ட ரூ.2700 கோடி ஹெராயின் பிடிபட்டது

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு கடத்தப்பட்ட 2700 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் அட்டாரி எல்லையில் பறிமுதல் செய்யப்பட்டது.
ஹெராயின்
ஹெராயின்
Published on

ஜெய்ப்பூர்:

பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் மாநிலம் வழியாக இந்தியாவுக்கு போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சுங்கத்துறை, வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி எல்லைப் பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு கடத்தப்பட்ட 2700 கோடி ரூபாய் மதிப்பிலான 532 கிலோ ஹெராயின் பிடிபட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

உப்பு மூட்டைகளுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெராயின் பாக்கெட்டுகளை சுங்கச்சாவடி சோதனையின்போது  பறிமுதல் செய்த அதிகாரிகள் இவ்விவகாரம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com