மினிலாரியில் மதுபாட்டில்களை கடத்த முயன்ற 3 பேர் கைது

கம்பம் அருகே மினிலாரியில் மதுபாட்டில்களை கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

உத்தமபாளையம்:

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்தநிலையில் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி அரசு மதுபான கடையில் இருந்து மதுபாட்டில்களை மினி லாரியில் கடத்தி செல்வதாக ராயப்பன்பட்டி தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலை மணி, சப்-இன்ஸ்பெக்டர் மாயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது மதுக்கடையில் இருந்து மதுபாட்டில்களை மினிலாரியில் ஏற்றிக்கொண்டு கடத்த முயன்ற 3 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள், கண்ணியம்பட்டியை சேர்ந்த சேகர் (வயது 34), சின்னமனூரை சேர்ந்த டேவிட் ராஜா (22), சின்னமனூர் தனியார் பார் உரிமையாளர் வெங்கடேசன் (46) ஆகியோர் என்பதும், விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் மினி லாரியில் கடத்த முயன்ற 960 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். தலைமறைவான மதுக்கடை கண்காணிப்பாளர் கருப்பசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com