கம்பத்தில் 2 கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த 2 கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைதாகினர்.
கைது
கைது
Published on

கம்பம்:

தேனி மாவட்டம் கம்பம் பத்திர காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுதாகர் (வயது 24), குரங்குமாயன் தெருவைச் சேர்ந்த காசிராஜன் (30) இருவரும் கடந்த 5 ம் தேதி கேரளாவிற்கு 6 கிலோ கஞ்சாவை கடத்த முயன்றபோது கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.

அங்கு தண்டணை அனுபவித்து வருகின்றனர்.இந்நிலையில் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் விதமாக காசிராஜன் மற்றும் சுதாகரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி, மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவுக்கு பரிந்துரைத்தார். அதன் பேரில் கலெக்டர் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

இதற்கான உத்தரவை கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி, மதுரை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com