கம்பம் அருகே தங்கதமிழ்செல்வன் உதவியாளர் வீட்டில் சோதனை

கம்பம் அருகே தங்க தமிழ்செல்வன் உதவியாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சோதனை நடந்த தங்கதமிழ்செல்வன் உதவியாளர் வீடு.
சோதனை நடந்த தங்கதமிழ்செல்வன் உதவியாளர் வீடு.
Published on

கம்பம்:

தேனி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர் தங்கதமிழ்செல்வன். இவர் தற்போது தினகரனின் தீவிர ஆதரவாளராக உள்ளார்.

இவரது உதவியாளர் கனகராஜ் (வயது 28). இவர் காமையகவுண்டன்பட்டி சாலையில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார். தரைதளத்தில் வீட்டின் உரிமையாளரும், முதல் தளத்தில் கனகராஜூம் வசித்து வருகின்றனர்.

வருமான வரித்துறை அதிகாரிகள் 4 பேர் கொண்ட குழு கனகராஜ் வீட்டுக்குள் நுழைந்து வீட்டின் கதவை பூட்டி சோதனை நடத்தினர். இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது சோதனையின் போது யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. கனகராஜ் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது.

இதே போல் கம்பம் ரேஞ்சர் அலுவலக சாலையில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதிகாரிகள் சோதனை நடத்துவது குறித்த தகவல் அறிந்ததும் தங்கதமிழ்செல்வன் ஆதரவாளர்கள் சிலர் கனகராஜ் வீட்டின் முன்பு திரண்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நாராயணத் தேவன் பட்டியில் உள்ள தங்கதமிழ்செல்வன் வீட்டில் குடும்பத்தினர் மதுரைக்கு சென்று விட்டனர். தங்க தமிழ்செல்வன் சென்னையில் உள்ளார். இன்றும் அவரது உதவியாளர் மற்றும் உறவினர் வீடுகளில் சோதனை நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com