கடலூர் அருகே தொழிலாளிக்கு கத்தி வெட்டு- 2 பேர் கைது

கடலூர் அருகே தொழிலாளிக்கு கத்தியால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
கைது
கைது
Published on

கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி அருகே உள்ள நல்லப்ப ரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் சங்கர் கணேஷ் (வயது 38). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவருடைய மனைவி அம்சவல்லி, அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த முரளி(29) மனைவி கற்பகம் என்பவர் அம்சவல்லியை திட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து அம்சவல்லி தனது கணவரிடம் கூறினார்.

பின்னர் சங்கர்கணேஷ், கற்பகத்தை திட்டி உள்ளார். இதையடுத்து முரளி, தனது உறவினர் செல்வகுமாரனுடன்(31) சென்று சங்கர் கணேசை கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து முரளி, செல்வகுமாரன் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com