கடலூரில் கடலில் மூழ்கி ராணுவ பெண் அதிகாரி பலி

கடலூரில் அசாம் மாநிலத்தில் ராணுவ மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் அதிகாரி கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூரில் கடலில் மூழ்கி ராணுவ பெண் அதிகாரி பலி
Published on

கடலூர் முதுநகர்:

கர்நாடக மாநிலம் வடக்கு பெங்களூரு, ஆர்.எம்.வி. விரிவாக்கத்தை சேர்ந்தவர் பெரோஷ்அகமதுகான். இவருடைய மனைவி ஆலம் ஆராகாத்து(வயது 54). இவர் அசாம் மாநிலம் தேஜ்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் கடலூர் செம்மண்டலத்தில் உள்ள தனது உறவினரின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஆலம் ஆராகாத்து அவரது கணவர், மற்றும் மகன், மகளுடன் பெங்களூருவில் இருந்து காரில் வந்தார்.

நேற்று மாலை கடலூர் முதுநகர் அக்கரை கோரிக்கு சென்று உறவினர்களுடன் கடலில் குளித்தார். அப்போது ஆலம் ஆராகாத்து ராட்சத அலையில் சிக்கி மூழ்கினார். அக்கம் பக்கத்தில் நின்று கொண்டிருந்த மீனவர்கள் ஓடோடி வந்து கடலில் மூழ்கிய ஆலம் ஆராகாத்தை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஆலம் ஆராகாத்து பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com