சிஎஸ்கே வேட்டைக்கு தயார்: அசத்தல் டுவீட் உடன் துபாய் சென்றடைந்தார் இம்ரான் தாஹிர்

கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் இம்ரான் தாஹிர் துபாய் சென்றடைந்துள்ளார்.
இம்ரான் தாஹிர்
இம்ரான் தாஹிர்
Published on

ஐ.பி.எல். 13-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், அபு தாபி, ஷார்ஜா ஆகிய மூன்று இடங்களில் நடக்கிறது. இதற்காக 8 அணி வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகம் சென்று போட்டிக்கு தயாராகி வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள தென்அப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடினார். தற்போது தொடர் முடிந்துள்ளதால், துபாய் சென்றடைந்துள்ளார். அங்கு சென்றடைந்த அவர் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட பின் அணியுடன் இணைவார்.

துபாய் சென்றடைந்த இம்ரான் தாஹிர் தனது டுவிட்டர் பக்கதில் ‘‘என் இனிய தமிழ் மக்களே தஞ்சமடைந்தேன் அன்பு இல்லத்தில் (துபாய்). போட்டிகள் துவங்க ஒரு வாரம் இருக்கும் இந்த தருவாயில் நாங்கள் சென்னை ஐபிஎல் வேட்டைக்கு தயார். நீங்கள் ஆட்டத்தை காண தயாரா? #eduda vandiya poduda whistle’’ எனப்பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com