ஜிசாட் 6ஏ செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் 27 மணிநேர கவுன்ட் டவுன் தொடங்கியது

இஸ்ரோ தயாரித்துள்ள தொலைத்தொடர்புக்கு உதவும் ஜிசாட் 6ஏ செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி. எஃப் 08 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் ஏவுவதற்கான 27 மணிநேர கவுன்ட் டவுன் தொடங்கியது.
ஜிசாட் 6ஏ செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் 27 மணிநேர கவுன்ட் டவுன் தொடங்கியது
Published on

சென்னை:

இஸ்ரோ தயாரித்துள்ள தொலைத்தொடர்புக்கு உதவும்  ஜிசாட் 6ஏ செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி. எஃப் 08 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் ஏவுவதற்கான 27 மணிநேர கவுன்ட் டவுன் தொடங்கியது

தொலைத் தொடர்புக்கு உதவும் ஜிசாட் 6ஏ செயற்கைக்கோளை இஸ்ரோ நிறுவனம் தயாரித்துள்ளது. இதனை, ஜி.எஸ்.எல்.வி. எஃப் 08 ராக்கெட் மூலம் ஏவுவதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டின.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து நாளை மாலை 4.56 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான 27 மணி நேர கவுன்ட் டவுன் இன்று பிற்பகல் 1.56 மணிக்குத் தொடங்கியது. #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com