தமிழகம் முழுவதும் காவல்துறையை சேர்ந்த 107 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகம் முழுவதும் காவல்துறையை சேர்ந்த 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

சென்னை:

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்து வருகிறது. ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் பலருக்கும் வைரஸ் பரவி உள்ளது. 

இந்நிலையில் தமிழகம் முழுவதும் காவல்துறையை சேர்ந்த 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் காவல்துறை, தீயணைப்புத்துறையை சேர்ந்த 85 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையில் இதுவரை 21 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் காவல்துறை, தீயணைப்புத்துறையை சேர்த்ந மொத்தம் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூரில் காவல்துறை, தீயணைப்புத்துறையைச் சேர்ந்த 12 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. மதுரையில் காவல்துறை, தீயணைப்புத்துறையைச் சேர்ந்த 5 பேருக்கும் கோவையில் காவல்துறை சேர்ந்த 7 பேருக்கும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com