கல்பாக்கத்தில் தொடர் கொள்ளை: பெண்-வடமாநில வாலிபர்கள் சிக்கினார்கள்

கல்பாக்கம் பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த பெண், வடமாநில வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்பாக்கத்தில் தொடர் கொள்ளை: பெண்-வடமாநில வாலிபர்கள் சிக்கினார்கள்
Published on

மாமல்லபுரம்:

கல்பாக்கம் அணுமின் நிலைய அதிகாரிகள் குடியிருக்கும் நகரியம் பகுதி வீடுகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் அடுத்தடுத்து நகைக்கொள்ளை நடந்தது.

கொள்ளையர்களை பிடிக்க காஞ்சீபுரம் மாவட்ட எஸ்.பி சந்தோஷ் தனிப்படை அமைத்தார். அவர்கள் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர். அங்கு வீடுகளில் வேலை செய்யும் புதுப்பட்டினத்தை சேர்ந்த பெண் ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

தனிப்படை போலீசார் அவரிடம் விசாரித்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் பானிபூரி விற்கும் வட மாநில வாலிபர்கள் இருவரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்பாக்கம் நகரியம் தொடர் கொள்ளை சம்பவங்களுக்கு அந்த பெண் மூளையாக செயல்பட்டாரா? எங்கெல்லாம் கொள்ளையடித்தார்கள்? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com